- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெறும் 5 பேர் தானா? கில், கம்பீர் எடுத்திருக்கும் சூதாட்ட முடிவால் இந்தியா ஜெய்க்கிறது கஷ்டம்.. டாம் மூடி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் பர்மிகாம் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது பலருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. கடந்தப் போட்டியில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. எனவே பேட்டிங் வரிசையில் ஆழத்தை அதிகரிப்பதற்காக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு எடுக்கப்படுவதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார்.

- Advertisement -

சூதாட்ட முடிவு:

அதற்காக கடந்தப் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டார். அவருடன் சர்துள் தாக்கூரும் நீக்கப்பட்டு கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டி விளையாடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக ஓய்வெடுக்கும் பும்ராவுக்கு பதில் ஆகாஷ் தீப் விளையாடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேட்டிங் வரிசையை ஆழப்படுத்துவதற்காக இந்தியா 3 ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் காரணமாக வெறும் 5 முழுமையான பேட்ஸ்மேன்களுடன் மட்டும் விளையாடும் சூதாட்டத்தை போன்ற முடிவை இந்தியா எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி 5 பேட்ஸ்மேன்கள், 3 ஆல் ரவுண்டர்கள், 3 பவுலர்களை வைத்து விளையாடும் அணுகுமுறை பெரும்பாலும் வெற்றியைக் கொடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டரில் டாம் மூடி பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

டாம் மூடி விமர்சனம்:

“இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு தடுமாறக் கூடியதாக இருக்கிறது. ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாதது ஒரு விஷயம். ஆனால் வெறும் 5 பேட்ஸ்மேன்களை மட்டும் வைத்து விளையாடுவது ஒரு சூதாட்டம். பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் ஆழத்தை ஏற்படுத்தக்கூடிய ஆல் ரவுண்டர்களை வைத்து அணியை சரி செய்ய முயற்சிப்பது எப்போதும் வேலை செய்ததில்லை”

இதையும் படிங்க: 830 ரன்ஸ் அடிச்சும் விக்கெட் டேக்கரனா அவரை எடுக்கலான ஜெய்க்க முடியுமா? கில், கம்பீரை விளாசிய கவாஸ்கர்

“ஒரு டெஸ்ட் போட்டியில் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தான் நினைப்பதை விட அதிகம் தருவார்கள்” என்று கூறினார். மொத்தத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலர் இல்லாமல் விளையாடும் தைரியமான முடிவை இந்தியா எடுத்துள்ளது. இந்த புதுவிதமான முடிவுகளை வைத்து இந்தியா வெற்றி பெற்று விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -