ரவி சாஸ்திரிக்கு பதிலாக இந்திய பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள வெளிநாட்டு பயிற்ச்சியாளர் – இவரா ?

Ravi-shastri
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு .

இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி விண்ணப்பிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் சன்ரைசர்ஸ் அணிக்காக பயிற்சியாளராக பணியாற்றி வந்த டாம் மூடி தற்போது அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். இதன் முக்கிய காரணமே இந்திய அணியின் பயிற்சியாளராக ஒரு திட்டமிட்டு இருப்பதுதான்.

moody

எனவே இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தால் இவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் இவரது தலைமையில் சன்ரைசர்ஸ் அணி சுமாரான வீரர்கள் இருந்தே பலமாக திகழ்ந்தது. மேலும் 2016ஆம் ஆண்டு இவரது தலைமையில் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement