இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடைசியாக விண்ணப்பித்த ஆஸ்திரேலிய நட்சத்திரம் – விவரம் இதோ

Ravi-Shastri
Advertisement

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்றோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டாம் மூடி விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே இவர் இந்திய தலைமை பயிற்சியாளராக இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அப்போது அவரது விண்ணப்பத்தை பிசிசிஐ ஏற்கவில்லை. இவர் சன்ரைசர்ஸ் அணி தற்போது பயிற்சியாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

moody

விராட் கோலி ஆதரவு தொடர்ந்து ரவிசாஸ்திரிக்கு இருப்பதால் அவர் பயிற்சியாளராக தொடர்வார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் டாம் மூடி, ஜெயவர்த்தனே மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement