அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்த வேளையில் தற்போது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்கியது.
இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணம் :
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 46 ரன்களுக்கு சுருண்டது. அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 462 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக முதல் இன்னிங்சிலேயே அந்த அணி 356 ரன்கள் என்கிற பிரமாண்டமான முன்னிலை பெற்றது.
அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 462 ரன்கள் குவிக்க 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தோம். இந்த போட்டியில் டாசில் தோல்வியை சந்தித்தது எங்களுக்கு சாதகமாக முடிந்தது.
நாங்கள் டாசில் வெற்றி பெற்றிருந்தாலும் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்போம். ஆனால் டாசில் தோற்று முதலில் பந்து வீசியதும் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னுக்கு கொண்டு வந்தனர். இந்த போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிச்சயம் வலுவான கம்பேக் கொடுக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்தோம்.
இதையும் படிங்க : இப்படி நடக்கும்னு நான் சத்தியமா எதிர்பாக்கல.. தோல்விக்கு இதுதான் காரணம் – ரோஹித் சர்மா வருத்தம்
அந்த வகையில் இந்திய அணியும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்ந்தது. இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய அணியை 100 ரன்களுக்கு சுருட்ட முடிந்தது. இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் கடந்த சில மாதங்களாகவே வேறு லெவலில் உள்ளது என டாம் லேதம் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



