என்னங்க இப்படி காமெடி பண்றீங்க. வார்த்தையால் வம்பை விலைக்கு வாங்கிய விஜய் ஷங்கர் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்

- Advertisement -

தமிழக வீரரான விஜய் சங்கர் கடந்த 2018ஆம் ஆண்டு டி20 போட்டியிலும், 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடியுள்ளார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவரது திறமையை வெளிப்படுத்தவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் வெறும் 47 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இப்படி மோசமாக விளையாடி வரும் விஜய் சங்கர் பேட்ஸ்மேனா ? அல்லது பவுலரா ? உண்மையில் ஆல்ரவுண்டர் தானா ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது.

Shankar

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமீபத்தில் விஜய் சங்கர் அளித்த பேட்டியில் நான் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியும் என்னை அவர்கள் புறக்கணித்தார்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தான் களமிறங்க போட்டி எல்லாம் தான் சிறப்பாக விளையாடியதாகவும் தனக்கான பேட்டிங் பொசிஷன்தான் என்னுடைய பிரச்சனை என்றும் பின்வரிசையில் விளையாடுவதால் நான் சோபிக்க முடியாமல் போய்விட்டது என்று விஜய் சங்கர் கூறினார்.

மேலும் நான் டாப் ஆர்டரில் இறக்கப்பட்டு இருந்தால் காலிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரை போன்ற ஒரு பிரம்மாண்டமான ஆல்-ரவுண்டராக மாறி இருப்பேன் என்றும் விஜய்சங்கர் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிக அளவு கலாய்த்து தள்ளும் வகையில் வசமாக சிக்கியது. சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டி மற்றும் ஐபிஎல் போட்டி என எதிலுமே பெரிய அளவில் ரன் குவிக்க நீங்கள் எப்படி இந்திய அணியில் உங்களுடைய இடம் குறித்து பேசலாம்.

shankar 1

19 வயது 20 வயது இளம் வீரர்கள் கூட அசாத்தியமாக விளையாடி ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசி அரைசதம் அடிக்கின்றனர். ஆனால் இந்திய அணிக்காக அறிமுகமாகியும் உங்களால் இதுவரை பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. இப்படி ரன்களை குவிக்க சிரமப்படும் நீங்கள் எப்படி உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர் உடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளலாம் என்றும் விஜய் சங்கரை ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீங்கள் சரியாக விளையாடாத போது எப்படி நிர்வாகத்தின் மீது குறை கூறலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

shankar

அதுமட்டுமின்றி சில புள்ளி விவரத்தையும் ரசிகர்கள் இதில் முன்வைத்துள்ளனர். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 97 ரன்களும், 2021 ஐபிஎல் போட்டிகளில் 7 போட்டிகளில் விளையாடி 58 ரன்களையும் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஞ்சி போட்டியிலும் 69 ரன்களை மட்டுமே குவித்துள்ள விஜய்சங்கர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய பெரிய ஜாம்பவான்கள் உடன் தன்னை ஒப்பிடுவது தவறு என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement