இந்த விக்கெட் தான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. எங்களுக்கு சாதகமாக அமைந்ததும் அதுதான் – சவூதி பேட்டி

Southee-1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 46 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாளான இன்று 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

Southee 2

இதன் மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

ரஹானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று . இந்நிலையில் இந்த போட்டி முதல் இன்னிங்ஸ் குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவூதி கூறியதாவது : முக்கியமான நேரத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை நாங்கள் வீழ்த்தியபோது ரகானே மற்றும் பண்ட் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

pant

அவர்கள் இருவரும் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை பிரிக்க நினைத்தோம். அதற்கேற்றார்போல் பண்ட் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு ரகானே கொஞ்சம் அதிரடியாக ஆட முயற்சி செய்வார் ஏனெனில் அதன் பிறகு அவருடன் விளையாட சரியான பார்ட்னர்ஷிப் அமையாது என்ற காரணத்தினால் அவர் கொஞ்சம் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

Southee

அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது மேலும் அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி 165 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தோம். எனவே இந்திய அணியின் முதல் இன்னிங்சில் திருப்புமுனையாக அமைந்தது பண்டின் ரன்அவுட் தான் என்றும் டிம் சவுத்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -