இந்திய அணியை வீழ்த்த எங்களது இந்த பலமே காரணம். ரொம்ப மகிழ்ச்சி – டிம் சவூதி பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்த ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Southee-1

இந்தியாவிற்கு எதிரான நடந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது .

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற பின் அவர் பேசியதாவது : இந்தியா போன்ற ஒரு தரமான அணியை வீழ்த்தியது அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது பங்கிற்கு தங்களது வேலைகளைச் செய்தார்கள். எவ்வளவு அதிகமாக விளையாடுகிறோமோ அவ்வளவு நன்றாக விளையாடலாம் . மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஆடும்போது உங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும் .

Southee

ஒரு அணியாக பந்து வீச்சில் யூனிட்டாக 20 விக்கெட்டுகளை எடுப்பது அலாதியான இன்பமாக இருக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் வீசிய காற்று எனது பந்துவீச்சினை சற்று அதிகமாக சிறப்பாக வீச வைத்தது என்று டிம் சவூதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement