இந்த தோல்வியை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இந்த தொடர் தோல்விக்கு இதுவே காரணம் – சவூதி பேட்டி

Southee-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார். துவக்க வீரர்களான ராகுல் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

rohith 6

அதனை அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 53 ரன்களும், சைபர்ட் 50 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பும்ரா ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாக ராகுலும் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டி முடிந்து பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது : இன்றைய போட்டியும் மற்றொரு மிக நெருக்கமாக போட்டியாக சென்றது. எதிர்பாராத விதமாக இன்றும் நாங்கள் தோல்வி அடைந்த அணியாக உள்ளோம். நாங்கள் எந்த தவறை செய்தாலும் அதை இந்திய அணி வீரர்கள் இரு கைகளை நீட்டி வரவேற்கின்றனர்.

ind

இந்த போட்டியில் மிகப்பெரிய இடைவெளியாக எதுவும் நான் பார்க்கவில்லை. ரன்களும் அடிக்கக்கூடிய நிலைமையிலே இருந்தன. சின்ன சின்ன விடயங்கள் இந்த போட்டியில் தவறாக சென்றது. ஆனால் ஒருநாள் போட்டிகள் இதை விட வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் நாங்கள் சிறப்பாக செய்யும் ஒரு பார்மட் ஆக ஒருநாள் தொடரை பார்க்கிறோம்.

Advertisement