விராட் கோலியிடம் ஜேமிசன் மறுத்து பேசனதுல தப்பே இல்ல. கோலியின் வித்தை எங்ககிட்ட பலிக்காது – டிம் சவுத்தி வெளிப்படை

Southee

இந்திய அணி அடுத்ததாக ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்து வந்தடைந்த நிலையில் இந்திய அணி தற்போது மே 19ஆம் தேதி முதல் 14 நாட்கள் மும்பையில் தனி படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து புறப்படும் இந்திய அணி அங்கும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் பயிற்சியில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

INDvsNZ

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்தினை வெளியிட்டு வர தற்போது இந்த இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கோலியும், கைல் ஜேமிசனும் ஒன்றாக விளையாடினர். இதனை பயன்படுத்தி பயிற்சியின்போது ஜேமிசனிடம் விராட் கோலி டியூக் பந்தில் எப்படி வீசுவது என்பது குறித்து விசாரித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜேமிசன் டியூக் பந்தை வீசி இருக்கிறாரா ? அவர் எவ்வாறு வீசுகிறார் ? என்பது போன்ற விவரங்களை விராட் கோலி கேட்டு தெரிந்து வைத்துள்ளார்.

Jamieson

இதிலிருந்து விராட் கோலி எவ்வளவு ஸ்மார்ட்டான வீரர் என்று புரிந்துகொள்ள முடிகிறது என்று சவுத்தி கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : வலைப்பயிற்சியின் போது டியூக் பந்தை வைத்து பவுலிங் போட கோலி கூறியும் அதை சாமர்த்தியமாக மறுத்துள்ளார் ஜேமிசன். கோலி சொன்னதை செய்யமாட்டேன் என்று ஜேமிசன் கூறியதில் தவறே இல்லை.

- Advertisement -

Jamieson

நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் அவரது விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்துவார். ஜேமிசன் விரிக்கும் வலையில் கோலி நிச்சயம் சிக்குவார் என டிம் சவுத்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வரும் கோலி இந்த போட்டியில் நிச்சயம் சதமடித்து பலமாக திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement