நியூசிலாந்து அணி சார்பாக வரலாற்று சாதனையில் இடம்பெற்ற டிம் சவூதி – என்ன சாதனை தெரியுமா ?

Southee-2
- Advertisement -

ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று, நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான டிம் சௌத்தி, மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் விளையாடி வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தங்களது முதல் இன்னிங்சை விளையாடி முடித்திருக்கின்றன. இந்திய அணியானது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியானது நேற்றைய ஆட்டத்தின்போது 249 ரன்களுக்கு தனது மொத்த விக்கெட்டையும் இழந்தது.

Jamieson 2

- Advertisement -

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில், டிம் சௌத்தியின் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். முதல் இன்னிங்சின்போது ஆரம்ப ஓவர்களில் விக்கெட் வீழ்த்த தடுமாறிய அவர், இந்த இன்னிங்சில் அற்புதமாக பந்து வீசி மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

சுப்மன் கில்லின் விக்கெட்டை எடுத்த போது, நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது பந்து வீச்சாளர் மற்றும் முதல் வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை டிம் சௌத்தி படைத்துள்ளார். இதற்கு முன்பாக அந்த அணியின் முன்னாள் ஸ்பின் பௌலரான டேனியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை கைப்பறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகது. நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியிலில் முதல் மூன்று இடங்களை டேனியல் வெட்டோரி (696 விக்கெட்டுகள்), டிம் சௌத்தி ( 601 விக்கெட்டுகள்), ரிச்சார்ட் ஹார்ட் லீ ( 589 விக்கெட்டுகள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.

Southee

அந்த அணியின் மற்றொரு வேகப் பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் 504 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியானது, நேற்றைய நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் அடித்துள்ளது.

Southee 1

இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி மற்றும் செட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் நாட் அவுட் பேட்ஸ்மேனாக வெளியேறி இருக்கின்றனர். மழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த போட்டிக்கு ரிசர்வ்டே வழங்கப்பட்டிருந்தாலும், இன்னும் இந்திய அணியே தனது இரண்டாவது இன்னிங்சை முடிக்காமல் இருப்பதால், இந்த போட்டியானது ட்ராவில் தான் முடிவுபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement