70 வருசம்.. இந்தியாவை சாய்க்க முடியும்ன்னு உலகிற்கே காமிச்சுருக்கோம்.. இது அந்த வெற்றிக்கு சமம்.. சௌதீ பேட்டி

Tim Southee
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நியூஸிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வென்று நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக 1955 முதல் இந்தியாவில் விளையாடும் அந்த அணி சுமார் 70 வருடங்களில் காணாத வெற்றியை தற்போது பதிவு செய்துள்ளது. அத்துடன் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா தங்கள் சொந்த மண்ணில் 18 தொடர்களில் தொடர்ந்து தோற்காமல் மிரட்டி வந்தது. அந்த 12 வருட சாதனையையும் நியூசிலாந்து அணி தற்போது உடைத்துள்ளது.

- Advertisement -

உலகிற்கே காமிச்சுருக்கோம்:

இந்நிலையில் வலுவான இந்திய அணியையும் அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்பதை உலகின் மற்ற அணிகளுக்கு நியூஸிலாந்து காண்பித்துள்ளதாக டிம் சௌதீ பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கு நிகராக இந்த வெற்றியும் நியூஸிலாந்தின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ள இந்த வெற்றி இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது சாத்தியம் என்று உலகிற்கு காண்பித்துள்ளது. இங்கே கொஞ்சம் கடினமான நேரங்களும் நிறைய நல்ல தருணங்களும் இருந்தன. உலகின் இந்த இடத்திற்கு வரும் போது எப்போதும் கடினமான நேரங்களே இருக்கும்”

- Advertisement -

சௌதீ பெருமை:

“ஆனால் இந்த வெற்றி கொஞ்சம் இனிப்பை கொடுக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை (2021) எதுவும் தாண்ட முடியாது. ஆனால் இந்த வெற்றி அதற்கு சமமாக இருக்கும். இந்த 2 வெற்றிகளை மற்ற வெற்றிகள் தாண்டுவது கடினம். இது என்னுடைய கேரியரின் ஹைலைட்டான வெற்றியாகும். ஏனெனில் இந்தியாவில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்”

இதையும் படிங்க: 100 ரன்ஸ்.. மிதாலி ராஜை முந்திய மந்தனா வரலாற்று சாதனை.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

“வரலாற்றில் நிறைய நியூசிலாந்து அணிகள் இங்கே வந்துள்ளன. ஆனால் அவர்களால் சாதிக்க முடியாததை நாங்கள் கடந்த சில வாரங்களில் சாதித்துள்ளது மிகவும் ஸ்பெஷலானது. இன்னும் இந்த தொடரில் அடுத்த வாரம் விளையாட வேண்டியுள்ளது. அது கடினமாக இருக்கும்” என்று கூறினார். இதையடுத்து இத்தொடரின் கடைசிப் போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement