
இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து 2 – 0 (2) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் 2வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதை விட மோசமாக விளையாடிய நியூசிலாந்து 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டான நியூசிலாந்து குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்த மோசமான சாதனை படைத்தது. இறுதியில் 2வது இன்னிங்ஸில் போராடியும் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் இலங்கைக்கு எதிராக 15 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பரிதாபமாக தோற்றது.
இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் இலங்கையின் ஸ்பின்னர்களை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை கொண்ட இலங்கையில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்டில் கொஞ்சம் போராடிய தாங்கள் 2வது இடத்தில் போராடாமலேயே தோற்றதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர் இதை விட சவாலாக இருக்கும் என்பதால் எப்படி வெல்லப் போகிறோம் என்று சௌதீ கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தொடர் முடிவில் பேசியதற்கு வருமாறு.
“இந்த தோல்வி மிகவும் கடினம். அந்த தோல்வியை சந்தித்த அணியின் பக்கம் இருப்பது மிகமிக கடினம். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் கடினமான இடம். முதல் போட்டியில் நாங்கள் கடினமாக போராடி வெற்றிக்கான தருணங்களை கண்டோம். ஆனால் இந்தப் போட்டி அதை விட கடினமாக இருந்தது. இப்போது நாட்டுக்கு திரும்பி மறுசீரமைப்பு செய்ய வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியா – வங்கதேசம் 3வது நாளில் நேர்ந்த கொடுமை.. ஆடம்பரம் தேவையா? ஜெய் ஷா மீது ரசிகர்கள் அதிருப்தி
“அதன் பின் இந்தியாவுக்கு செல்ல வேண்டும். இலங்கை போலவே இந்தியாவும் இந்த உலகின் ஒரே மாதிரியான பகுதியாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த 12 வருடங்களாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அப்படிப்பட்ட இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் அக்டோபர் 16 – நவம்பர் 1 வரை 3 கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.