மீண்டும் ஏமாற்றிய கிங் கோலி. கோலியின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த – நியூசி வீரர்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சர்ச் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல்நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியிலும் சமீபகாலமாக சொதப்பி வரும் இந்திய அணியின் கேப்டன் கோலி கவலை அளிக்கும் விதமாக 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மேலும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவரது ஆட்டம் ரசிகர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்த போட்டியில் மயங்க் அகர்வால் 7 ரன்களில் அவுட் ஆகி வெளியேற ப்ரித்வி ஷா 54 ரன்கள் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இந்திய அணியின் சரிவு தொடங்கியது. கேப்டன் கோலி 3 ரன்களிலும், ரஹானே 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதனால் 113 அவர்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தற்போது விளையாடி வருகிறது. கோலியின் இந்த விக்கெட்டை இதுவரை அதிக முறை வீழ்த்தியவர் என்ற சாதனையை டீம் சவுதி வைத்துள்ளார். இதுவரை விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 10 முறை டிம் சவூதியிடம் தனது விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Southee

இந்த தொடரில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக கோலியின் சராசரி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. கோலியின் தற்போதைய ஃபார்ம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது மேலும் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை தருவதால் கோலி மீண்டும் எப்போது பழையபடி தனது ஆட்டத்திற்கு திரும்புவார் என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement