40 ஆண்டுகால சாதனையை கான்பூர் மைதானத்தில் நிகழ்த்திய நியூசிலாந்து வீரர் – விவரம் இதோ

Southee-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரகானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்து இருந்தது.

iyer 3

- Advertisement -

அதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய நிலையில் ஜடேஜா 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் விக்கெட் கீப்பர் சாஹா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அதன் பின்னர் சதத்தை கடந்து சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அஷ்வின் 38 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணியானது தனது முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

southee

இதன்மூலம் அவர் இந்திய மண்ணில் ஒரு அசத்தலான சாதனை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்திய மண்ணில் கான்பூர் மைதானத்தில் கடந்த 40 வருடத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளராக தனது சாதனையை டிம் சவூதி இங்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement