டெஸ்ட் கிரிக்கெட்டில் பாண்டிங்கின் சாதனையை கடந்து தோனியை நெருங்கிய டிம் சவூதி – விவரம் இதோ

southee-3
- Advertisement -

உலகிலேயே மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழும் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான டிம் சவுத்தி, டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய சாதனை ஒன்றை தனது பேட்டிங்கில் நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக அவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்கை தாண்டிச் சென்றிருக்கிறார் என்பது மிகப் பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று, நியூசிலாந்து அணியின் கேப்டானான கேன் வில்லியம்சன் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நின்றார்.

southee 6

- Advertisement -

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக அவுட்டாகி வெளியேறியனர். அந்த சமயத்தில் பின் வரிசை வீரராக களமிறங்கிய டிம் சவுத்தி, கேன் வில்லியம்சனுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46 பந்துகளை எதிர் கொண்ட அவர் 30 ரன்களை அடித்து முதல் இன்னிங்சில் அந்த அணி முன்னிலை பெறுவதற்கு மிக முக்கிய காரணமாகவும் திகழ்ந்திருக்கிறார்.

இந்த இன்னிங்சில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த அவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை கடந்து சென்றிருக்கிறார். ரிக்கி பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் 73 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதனை இதற்கு முன்பே சமன் செய்திருந்த டிம் சவுத்தி, நேற்று இரண்டு சிக்ஸர்கள் அடித்து 75 சிக்ஸர்களுடன் அவரை கடந்து சென்றிருக்கிறார்.

southee 4

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோணிக்கும் அவருக்கும் இடையில் மூன்று சிக்ஸர்கள் மட்டுமே வேறுபாடாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியிலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ப்ரெண்டன் மெக்கல்லம், 107 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் (98 சிக்ஸர்கள்) உள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜாக்யூஸ் கலீஸ் ( 97 சிக்ஸர்கள்) ஆகியோர் உள்ளனர். அந்த பட்டியலில் 75 சிக்ஸர்களுடன் 15வது இடத்தைப் பிடித்திருக்கும் சௌத்தி, டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement