இவர் இருக்கும் வரை எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்க வெயிட்டான டீம் தான் – டிம் பெயின் பேட்டி

Paine
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எளிதாக வீழ்த்தி அசத்தியது. அதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அதற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியும் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் காயம் காரணமாக விளையாடவில்லை.

வார்னர் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பாதகமாக அமைந்தது. ஏனெனில் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் மோசமாக விளையாடி வருகின்றனர். இந்த நிலைமை மாறினால் தான் ஆஸ்திரேலியா அணி அதிக ரன்களை குவிக்க முடியும். இந்நிலையில் நாளை துவங்க உள்ள மூன்றாவது போட்டியில் வார்னர் அணியில் விளையாட இருப்பது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டீம் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Warner

இது குறித்து அவர் கூறுகையில் : வார்னர் அணியில் இடம் பிடித்து விளையாடும் போது எதிர் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மூலம் அணிக்கு நல்ல ரன் குவிப்பு கிடைக்கும் அல்லது அவரது வருகை எனர்ஜி அளிக்கும் அவர் இருக்கும்போது ஆஸ்திரேலியா எப்போதும் சிறப்பாக அணியாக இருந்துள்ளது என்று வார்னரின் இடம் குறித்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

Warner

மிடில் ஆர்டரில் லாபுஷேன் மற்றும் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடிய அணியை பாதுகாப்பார்கள் என்றும் இந்திய அணி சற்று சோர்வடையும் போது எங்களது வீரர்கள் சாதகமாக பேட்டிங் செய்வார்கள் அதற்கு வார்னர் பெரிய பங்களிப்பாக இருப்பார் என பெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement