இந்திய அணிக்கு எதிரான எங்களது அபார வெற்றிக்கு இவர்களே காரணம் – மனம்திறந்த ஆஸி கேப்டன்

paine
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களை குவிக்க அதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் பின்னர் 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தனர். எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கான ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியை பெற்றது மட்டுமின்றி தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி பெற்ற இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் டிம் பெயின் அளித்த பேட்டியில் கூறியதாவது :

“உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னால் கூட இந்த வெற்றியை நம்பமுடியவில்லை”, எங்களுக்கு எந்த வகையிலும் குறையில்லாத இந்திய அணியை வீழ்த்துவதற்கு நிச்சயம் போராட்டம் நடைபெறும் என்று நினைத்திருந்தேன். அதேபோன்று இந்த போட்டி அருமையான போட்டியாக அமைந்தது. மேலும் எப்போதும் இந்திய அணி வலிமையான அணியை என்றும் நான் மீடியாவில் பேசி வந்தேன்.

இந்த போட்டியின் அபார வெற்றிக்கு முழுமையான காரணம் அனைத்தும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் தான். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் எங்கள் பேட்டிங்கில் சில முன்னேற்றம் தேவை என டிம் பெய்ன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement