இந்திய அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – டிம் பெயின் பேட்டி

Paine
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-1 என்ற நிலையில் சமநிலையை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே குவிக்க அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ரஹானேவின் சதத்தினாலும், ஜடேஜாவின் அரை சதத்தினாலும் 326 ரன்கள் குவித்தது.

Gill

பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் கில் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும், ரஹானே 27 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களுடைய ஆட்டம் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. நாங்கள் உண்மையிலேயே மோசமான கிரிக்கெட்டை இந்த போட்டியில் விளையாடி உள்ளோம். சொதப்பலான ஆட்டத்தையும் இந்த போட்டியில் வெளிப்படுத்தியதால் இந்த மோசமான தோல்வி ஏற்பட்டது. இந்திய அணி இந்த வெற்றிக்கு தகுதியான அணி என்றே கூற வேண்டும்.

rahane 1

ஏனெனில் எங்களை அவர்கள் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து நேரங்களிலும் தவறு செய்ய வைத்து சிறப்பாக விளையாடினர். இது போன்ற தரமான அணிக்கு எதிராக விளையாடும் பொழுது இது போன்ற தோல்விகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். மீண்டும் ஒருமுறை நான் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்களை அழுத்தத்திற்கு உள்ளேயே இந்த போட்டி முழுவதும் வைத்திருந்தனர். எங்களுடைய பேட்டிங் ஆர்டரிலுலும் சற்று குறைபாடுகள் உள்ளது.

மேலும் பேட்டிங் வரிசையில் நாங்கள் சற்று மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய கிரீன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இனி வரும் போட்டிகளில் அவர் இடம்பிடித்து அதேபோன்ற ஆட்டத்தை நிச்சயம் காண்பிப்பார் என்று நினைக்கிறேன். வரும் நாட்களில் அனைத்தும் மாறும் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆரம்பிப்பார்கள் என டிம் பெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement