கடந்த முறை இந்திய அணியிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு – ஆஸி வீரர் ஓபன் டாக்

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடருக்காக இரு அணியை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

மேலும் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக 71 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்தது. அதனால் இம்முறை இந்திய அணியை பழிதீர்க்கும் விதமாக டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.

அதுமட்டுமின்றி கடந்த தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. ஆனால் இம்முறை அவர்கள் அந்த அணியுடன் இணைந்து உள்ளதால் ஆஸ்திரேலிய அணி மேலும் பலம் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

indvsaus

எது எப்படி இருந்தாலும் இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற வெற்றி வெற்றிதான் அவர்கள் அடைந்த தோல்வி தோல்வி தான். இந்நிலையில் கடந்த முறை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தற்போது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

paine

இந்தியாவுக்கு எதிராக கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது. மேலும் இப்போது அந்த தோல்வியை நினைத்தால் கூட எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி கடந்த முறை நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் மோசமானது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement