நான் அவர்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது. நான் செய்தது தப்பு தான் – உண்மையை ஒப்புக்கொண்ட டிம் பெயின்

Paine
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. அதன் பிறகு முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆஸ்திரேலிய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

paine 2

- Advertisement -

அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணிக்கு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது அந்த இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் விஹாரி மற்றும் அஷ்வின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டது மட்டுமின்றி அம்பயரின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். புஜாராவின் விக்கெட் சந்தேகமாக இருந்ததால் களத்தில் இருந்த நடுவரான டேவிட் பூன் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார் .மூன்றாவது நடுவரும் புஜாராவுக்கு விக்கெட் கொடுக்கவில்லை.

Paine

இந்த அதிர்ப்தியினால் களத்தில் உள்ள நடுவரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு தகுதி இழப்பு புள்ளியும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து பேசியது மோசமான செயல் என வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

paine 1

நான் அம்பயரிடம் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது. இதனால் நான் ஒரு மோசமான உதாரணமாக மாறிவிட்டேன். நான் நடுவரிடம் பேசிய வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருக்கும். இதனை ஏராளமான குழந்தைகளும் பார்த்திருப்பார்கள். நான் செய்தது மிகப் பெரிய தப்பு என்று மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு உள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement