எல்லாரும் சொல்ற மாதிரி விராட் கோலியிடம் பயந்துடக்கூடாது.. நான் வேணும்னே இதை செய்வேன்.. டிம் ஃபைன் ஓப்பன்டாக்

Tim Paine
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போல அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் இதுவரை 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றி நாயகனாக செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக களத்தில் சாதாரண விக்கெட் விழுந்தாலே அதை விராட் கோலி வெறித்தனமாக கொண்டாடக் கூடியவர். அப்படிப்பட்ட அவர் எதிரணியினர் வம்பிழுத்தால் அதை சாதாரணமாக விடமாட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் அதற்கு பதிலடியாக மிகச் சிறப்பாக விளையாடி எதிரணியினர் வருந்தும் அளவுக்கு விராட் கோலி செயலால் பதிலடி கொடுத்து தோற்கடித்து விடுவார்.

- Advertisement -

வேணும்னே ஸ்லெட்ஜிங்:
எடுத்துக்காட்டாக 2014 சுற்றுப்பயணத்தில் மிட்சேல் ஜான்சன் ஆரம்பத்திலேயே பவுன்சரை வீசி விராட் கோலியின் மண்டையில் அடித்து கீழே விழ வைத்தார். அதற்காக அசராத விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி கடைசியில் சதமடித்து ஜான்சனுக்கு முத்தத்துடன் பதிலடி கொடுத்தார். அதனால் எதிரணியில் இருப்பவர்கள் யாரும் விராட் கோலியை தேவையின்றி சீண்டக்கூடாது என நாசர் ஹுசைன், மகாயா நிடினி போன்ற முன்னாள் வீரர்கள் சமீப காலங்களில் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கான விளைவை சந்திக்கக்கூடும் என்று பலரும் சொல்வதைக் கேட்டாலே தமக்கு எரிச்சலாகும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் ஃபைன் தெரிவித்துள்ளார். மேலும் கவனத்தை சீர்குலைத்து விக்கெட்டை எடுப்பதற்காக தாம் வேண்டுமென்றே விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே பயப்படாமல் ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டுமென தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள் அதை செய்தால் பதிலடி கொடுப்பார் என்று மக்கள் சொல்வதை கேட்கும் போது எனக்கு எரிச்சலாகும். பெரும்பாலான நேரங்களில் ரன்கள் அடிப்பார் என்பதால் நீங்கள் அவரிடம் பேசுகிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை. விராட் கோலியை நானும் அதிகமாக சீண்ட மாட்டேன். ஆனால் அவருடைய கவனத்தை சீர்குலைக்க முயற்சிப்பேன்”

இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2024 : 36/5 என சரிந்த திருச்சி.. 4க்கு 4.. கட்டுக்கடங்காமல் அடிக்கும் நடப்பு சாம்பியன் கோவை

“ஏனெனில் அப்படி செய்வதால் கவனத்தை சிதறவிட்டு அவர் சுமாரான ஷாட்டை அடிக்க வாய்ப்புள்ளது. எனவே அவரை யாரும் ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது என்று சொல்வதைக் கேட்கும் போது எனக்கு எரிச்சலாகிறது” என்று கூறினார். முன்னதாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விராட் கோலியின் நெஞ்சோடு நெஞ்சாக உரசுவது போல் சென்று அவர் வம்பிழுத்தார். ஆனால் கடைசியில் டிம்ஃபைன் அவுட்டானதும் அதை வெறித்தனமாக கொண்டாடி விராட் கோலி பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement