உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இவர்தான். ஒருவழியாக உண்மையை ஒப்புக்கொண்ட டிம் பெயின் – விவரம் இதோ

Paine

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெயின் இந்திய அணி வீரர்களை டெஸ்ட் போட்டியின்போது மைதானத்தில் சீண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி அவர் கடந்த இரு முறை இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் பெயின் மற்றும் இந்திய வீரர்கள் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற மோதல் மிகவும் வைரலாகியது. குறிப்பாக ரிஷப் பண்டை “பேபி சிட்டர்” என்று அழைத்து சீண்டினார்.

paine 1

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின்போது அஷ்வினுடன் ஏற்பட்ட வாக்குவாதம் என இந்திய வீரர்களுடன் இவர் போட்ட சண்டைகள் ஏராளம். 2018-19 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி இரண்டாவது முறை அவர்களை வீழ்த்தி அசத்தியது. இந்த இரு தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிம் பெயின் தான் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 36 வயதான அவர் தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் : விராட் கோலியை சிறந்த பேட்ஸ்மேன் என்று ஒப்புக்கொண்டார்.

paine 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : கோலி மைதானத்தில் கடுமையாக போட்டி அளிக்கக் கூடியவர். அதனாலேயே அவர் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். எங்களுக்கு எதிராக விளையாடுவதை ஒரு ஆர்வமாக வைத்திருக்கும் அவர் எங்களை கோபமூட்டும் செயல்களையும் செய்வதற்கு விரும்புவார், இதன் மூலமாகவே அவர் எப்போதும் சிறப்பாக விளையாடுகிறார்.

- Advertisement -

paine 2

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தொடரின்போது எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை என்னால் மறக்கவே முடியாது அதனை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் டிம் பெய்ன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement