இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுமா ? – ஆஸி கேப்டன் டிம் பெயின் பதில்

Paine
- Advertisement -

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு இணையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரினை ஐசிசி துவங்கியது. இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து உள்ள அனைத்து அணிகளையும் இத் தொடரில் விளையாட வைத்த ஐசிசி குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.

INDvsNZ

அதன்படி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இந்த இறுதிப் போட்டியானது தற்போது வரும் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் விளையாட ஏற்கனவே இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி முடித்து 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று நல்ல உத்வேகத்துடன் உள்ளது. அதேபோன்று கடந்த 3ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி சில நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு தங்களுக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர்.

IND

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை யார் கைப்பற்றுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஏற்கனவே இந்த இறுதிப் போட்டி குறித்து முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் ஆன டிம் பெயின் இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் அணி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது :

paine 1

இந்திய அணி அவர்களது சிறப்பான ஆட்டத்தை நெருங்கிய படி விளையாடி விட்டாலே போதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை எளிதில் வென்று விடுவார்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வீரர்களும் நியூசிலாந்து அணிக்கு சாதகம் அதிகம் என்று கூறிவரும் நிலையில் சிறிதும் தயக்கமின்றி இந்தியா இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்றுவிடும் என்று பெயின் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement