எங்க டீம்ல இருக்கும் எல்லாருக்கும் இந்திய வீரரான இவரை மட்டும் பிடிக்காது – ஆஸி கேப்டன் டிம் பெயின் ஓபன் டாக்

paine

கிரிக்கெட் உலகில் கடந்த பல வருடங்களாக ஆஸ்திரேலிய அணி என்றால் ஒரு மிகச் சிறப்பான அணியாக தான் இருந்துகொண்டிருக்கிறது. பெரிதும் அந்த நாட்டினர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே விரும்புவார்கள். களத்தில் மட்டுமல்லாது போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும் ஆடுகளத்தில் வித்தியாச வித்தியாசமாக எதிரணி வீரர்களை கையாளுவார்கள்.

INDvsAUS

குறிப்பாக எதிரணி பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறவைக்க பந்து வீச்சாளர்கள் சீண்டுவது, வார்த்தைப் போரில் ஈடுபடுவது போன்றவற்றை வைத்து எதிரணி வீரர்களை சீண்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் விராட் கோலி இதற்கு அப்படியே மாறான நபர். எதிரணி வீரர்களை சீண்டி செய்யும் எந்த வேலையும் விராட் கோலியிடம் எடுபடவில்லை.

கடந்த பல வருடங்களாக ஆஸ்திரேலியாவிற்கு எப்போதெல்லாம் விராட் கோலி சென்று விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் அவரை சீண்டுவார்கள். ஆனால் அவர் அப்படியே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவார். சதமடித்து ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்து விடுவார். இதுகுறித்து பலரும் பலவாறு பேசியிருக்கின்றனர் .இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் டீன் பெயின் கூறுகையில்…

paine 1

என்னிடம் விராட் கோலியை பற்றி அவ்வப்போது கேள்விகள் கேட்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. என்னை பொருத்தவரை விராட் கோலியும் மற்ற வீரர்களை போல்தான். ஆனால் அவருடன் நான் நட்பு வைத்துக் கொண்டது கிடையாது. டாஸ் போடும்போது மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

- Advertisement -

paine 2

ஒரு ரசிகராக அவரது ஆட்டத்தை காண எங்களுக்கு பிடிக்கும். ஆனால் எங்களுக்கு எதிராக அவர் அதிக ரன்கள் அடிக்கும் போது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரருக்கும் விராட் கோலி ரன் குவிக்கும் போது பிடிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.