இந்திய அணி எங்களை தோக்கடிச்சது இப்படித்தான். சர்ச்சையான கருத்தை கூறிய டிம் பெயின் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Paine

கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றி அசத்தியது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். தற்போது அத் தொடரைப் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணி வீரர்கள் எங்களை கவனச் சிதறலுக்கு உள்ளாக்கிதான் அந்த தொடரை வென்றனர் என்ற சர்சையான கருத்தை கூறியிருக்கிறார். இது குறித்து ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த அவர்,

IND-1

இந்திய வீரர்களுடன் விளையாடும்போது மற்ற அணி வீரர்கள் மிக கவனாமாக விளையாட வேண்டும். ஏனெனில் அவர்கள், கிரிக்கெட் தொடருக்கு சம்பந்தமே இல்லாத சில நாடகங்களை அரங்கேற்றி நமது கவனத்தை சிதறடிப்பதில் வல்லவர்கள். இதுபோன்று ஒரு நாடகத்தை நடத்தி தான் எங்களுடனான டெஸ்ட் தொடரையும் அவர்கள் வென்றார்கள் என்று அவர் பேட்டியளித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்தரேலியா அணிகளுக்கு இடையே கடந்த வருடம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

- Advertisement -

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கே ஆட்டமிழந்த இந்திய அணி, அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமில்லமல், கேப்டன் விராட் கோலியும் தொடரில் இருந்து விலகி இந்தியா வந்து விட்டார். அவருக்குப் பிறகு ரஹானே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டு இந்திய அணியை வழி நடத்தி சென்றார். அதற்கிடையில் பல முன்னனி வீரர்க்ள் காயம் காரணமாக விளையாட முடியாமல் போக, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலியா அணியை பந்தாடியது.

INDvsAUS

அத்தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுத்தது. அப்போது கடைசி போட்டி நடைபெற இருந்த பிரிஸ்பேனில் கொரனா தாக்கம் அதிகமாக இருந்ததால், இந்திய அணி வீரர்கள் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் விளையாட மாட்டோம் என்று கூறினர். ஆனால் அதற்குப் பிறகு சமாதானம் அடைந்த இந்திய வீரர்கள், அதே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

டிம் பெய்ன் பேசும்போது, இந்திய வீர்ர்கள் கபா மைதானத்தில் விளையாட மாட்டோம் என்று ஆரம்பத்தில் கூறியதை சுட்டிக்காட்டி பேசினார். அதைப் பற்றி கூறிய அவர், தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிக்கு முன்பு இந்திய வீரர்கள் அப்படி கூறியதால், நாங்கள் கடைசி போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க மறந்து விட்டு, அந்த போட்டி எந்த மைதானத்திற்கு மாற்றப்படும் என்பதைப் பற்றி மட்டுமே யோசித்ததால் தான், நாங்கள் அந்த கடைசி போட்டியில் தோற்றதோடு மட்டுமல்லாமல் தொடரையும் இழந்தோம் என்று கூறினார். கபா மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை வெற்று பெறுவதற்கு முன்புவரை, 32 ஆண்டுகளாக எந்த ஒரு அணியும் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

indvsaus

இப்படி இந்திய அணியின் மீது டிம் பெய்ன் வைத்துள்ள விமர்ச்சனத்தை கண்டிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களும் அவரை டி்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வசைபாடி வருகின்றனர். அதில் சிலர் ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர் போன ஆஸ்திரலியா அணியின் கேப்டன், மற்ற அணிகளை குறைகூறுவதற்கு முன்பு தங்களது அணியின் கீழ்த்தரமான செயல்பாடுகளை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement