100 நாட்கள் தான் இருக்கிறது ! அதுக்குள்ள தெறிக்கவிட்ட தல தோணி ரசிகர்கள் !

Dhoni-birthday-celebration
- Advertisement -

இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-இல் களமிறங்குவதால் சென்னை ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தில் உள்ளனர்.சென்னை சூப்பர்கிங்ஸ் என்றாலே தோனி தான், தோனி என்றாலே ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில் அது சென்னை சூப்பர்கிங்ஸ் தான் என்கிற நிலைதான் இங்கே ரசிகர்களிடையே.

dhoni

- Advertisement -

இந்நிலையில் இன்னும் 100நாட்களில் தோனியின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில் தற்போது சமூவலைத்தளங்களில் தல தோனியின் பிறந்தநாள் வர இன்னும் 100 நாட்கள் தான் இருக்கின்றது என்கிற ஹேஷ்டேக்கை தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர் தோனியின் ரசிகர்கள்.அதிலும் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வதில் பெரும்பங்கு தமிழகத்தை சேர்ந்த தோனியின் ரசிகர்களையே சேரும்.

ஐபிஎல்-இன் முதல் சீசன் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தோனி தான் சென்னை அணியை தலைமை தாங்கி வழிநடத்தி வருகின்றார். ஒவ்வொரு ஐபிஎல்-யிலும் எதிரணிகளை புரட்டி எடுக்க காரணமாக இருந்ததில் தோனியின் பங்கு மிகஅதிகம். தனது பொறுமையான தலைமை பண்பாலும், சிறப்பான விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்காலும் சென்னை ரசிகர்களை கட்டிப்போட்டது மட்டுமில்லாமல் எதிரணியினரையும் திணறடித்த இவர் சென்னை அணிக்காக சிறப்பாக வழிநடத்தி ஐபிஎல் கோப்பையையும் பெற்றுத்தந்தவர்.

dhoni birthday

எனவே சென்னை ரசிகர்களால் “தல” தோனி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.இதனால் தான் இந்தியா முழுதும் தோனிக்கு ரசிகர்கள் இருந்தாலுமே தமிழக ரசிகர்கள் இன்னும் அதிகமாக அவரை கொண்டாடி வருகின்றனர்.தற்போது ஐபிஎல் தொடர்பாக தினமும் சென்னை அணி தொடர்பாக வெளியிடப்படும் செய்திகளையும், வீடியோக்களையும் உடனடியாக சமூகவலைத்தளங்களில் வைரலாக்குவதில் பெரும் பங்கும் இந்த ரசிகர்களையே சேரும்.

Advertisement