சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்திய திலக் வர்மா – விவரம் இதோ

Tilak-Varma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டு ஆட்டத்திலுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வலுவான முன்னிலையை பெற்றுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா நிகழ்த்திய சாதனை :

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது போட்டியில் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 72 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதோடு இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் நிகழ்த்தாத மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் நேற்று அடித்த 72 ரன்களுடன் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து 300 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடைசியாக திலக் வர்மா விளையாடிய 4 போட்டியில் ஆட்டமிழக்காமல் முறையே 107*, 120*, 19*, 72* அடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ஜாஸ் பட்லர் – விவரம் இதோ

இவருக்கு அடுத்து டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் அடித்த வீரராக மார்க் சாப்மேன் 271 ரன்களும், ஆரோன் பின்ச் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தலா 240 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement