
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி சூரியகுமார் யாதவின் தலைமையில் மிக பலம் வாய்ந்த அணியாக இருந்து வருவதால் நிச்சயம் இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் டாப் ஆர்டரில் நட்சத்திர இளம் இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மாவும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். சமீபத்தில் காயம் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவர் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் எதிர்வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக தனது கருத்தினை அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த வேளையில் தற்போது மீண்டும் இந்திய அணியுடன் விளையாட சம்மதித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள திலக் வர்மா கூறுகையில் : நாங்கள் எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம். மேலும் அதற்கான பயிற்சிகளையும் ஏற்கனவே செய்து தற்போது தயார் நிலையில் இருக்கிறோம். எதிர்வரும் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் நமது அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை வீழ்த்தும்.
இதையும் படிங்க : இஷான் கிஷனுக்கு மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம் வழங்கப்படாதது ஏன்? – விவரம் இதோ
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில வாரங்களாகவே நான் நல்ல முறையில் விளையாடி வருகிறேன் எனவே இந்த உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற என்னுடைய முழு பங்கினையும் வழங்குவேன் என திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.