- Advertisement -
ஐ.பி.எல்

உலககோப்பை தொடரில் விளையாடியது எனக்கு இங்க ஹெல்ப் பண்ணுச்சு – திலக் வர்மா நெகிழ்ச்சி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை மிகச் சிறப்பாக துரத்தி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு பிறகு பேசிய : திலக் வர்மா

இந்த போட்டியின் போது 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய மும்பை அணி விளையாடுகையில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நான்காவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 75 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடைசி மூன்று ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆட்டம் இழக்காமல் சிக்ஸருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மிகவும் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்ட வேளையில் அவர் பேசியதாவது :

நான் போட்டிகளை முடித்துக் கொடுப்பதை மிகவும் விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விளையாடியதற்கு பிறகு, டி20 உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் விளையாடிய பின்னர் போட்டிகளை எப்படி முடித்து கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அங்கு கற்ற பாடம் தான் தற்போது ஐபிஎல் போட்டிகளில் உதவுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இது நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்ல..தனது கேப்டன்சி குறித்து போட்டிக்கு பின்னர் பேசிய – ஜஸ்ப்ரீத் பும்ரா

அதனால் தான் ஆட்டத்தை சிறப்பாக வெற்றி பெற்று கொடுக்க முடிகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர்கள் 15 ஓவர்களுக்கு பின்னர் அதிரடியாக விளையாடி பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தனர். அதனால் நானும் இறுதிவரை நின்றால் நிச்சயம் இலக்கினை எட்ட முடியும் என்று நினைத்து போட்டியை முடித்ததாக திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -