- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சொல்ல வார்த்தைகளே இல்ல.. நாட்டுக்காக சதமடிக்க உதவிய அவருக்கு நன்றி.. ஆட்டநாயகன் திலக் வர்மா பேட்டி

மன்னிச்சுருப்பா 🙏

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 13ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா சதமடித்து 107* (56) ரன்களும் அபிஷேக் சர்மா 50 (25) ரன்களும் குவித்து அசத்தினார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 2, சிம்லேன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் 220 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் முடிந்த அளவுக்கு போராடியும் 208-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 41, மார்கோ யான்சென் 54 ரன்கள் குவித்தார்கள்.

அட்டாநாயகன் திலக்:

- Advertisement -

இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இந்த வெற்றியால் 2 – 1* (4) என்ற கணக்கில் இத்தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு சதம் அடித்து முக்கிய பங்காற்றிய திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்தியாவுக்காக சதமடிக்க வேண்டும் என்ற தம்முடைய பெரிய கனவு நிஜமாகியுள்ளதாக திலக் வர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போட்டியில் தமக்கு மூன்றாவது இடத்தில் விளையாடும் வாய்ப்பை கொடுத்து சதமடிக்க உதவிய கேப்டன் சூரியகுமாருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது மிகவும் கடினமான வாய்ப்பு. ஆனால் நாங்கள் போட்டியை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. அதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை”

- Advertisement -

சூரியகுமாருக்கு நன்றி:

“என்னுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். இந்த வாய்ப்பில் இந்த சதம் சரியான நேரத்தில் வந்துள்ளது. இதற்கான அனைத்து பாராட்டுக்களும் எங்கள் கேப்டன் மிஸ்டர் சூரியகுமார் யாதவை சேரும். அவர் 3வது இடத்தில் எனக்கு வாய்ப்பை கொடுத்து சுதந்திரமாக விளையாடுமாறு சொன்னார். அவருக்கு மீண்டும் நன்றிகள்”

இதையும் படிங்க: 11 ரன்ஸ்.. போராடிய தெ.ஆ அணியை.. தடுமாற்றமாக பந்து வீசியும் எக்ஸ்ட்ராஸ் வைத்தே இந்தியா வீழ்த்தியது எப்படி?

“நான் என்னுடைய அடிப்படைகளை பின்பற்றினேன். ஆரம்பத்தில் பிட்ச் இரு வேகத்தில் இருந்தது. அதனால் அபிஷேக் ஷர்மா அவுட்டான பின் புதிய பேட்ஸ்மேன்கள் அதில் அதிரடியாக விளையாடுவது எளிதாக இல்லை. இருப்பினும் பார்ட்னர்ஷிப் அமைத்து நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசி போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -