இங்கிலாந்தின் பெஸ்ட் பவுலர் ஆர்ச்சரை டார்கெட் பண்ண இதான் காரணம்.. 2மே தெரிஞ்சுருக்கனும்.. திலக் வர்மா

Tilak Varma
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜனவரி 25ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அந்தத் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 166 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, கேப்டன் சூரியகுமார், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினார்கள். அதனால் 9 ஓவரில் 78-5 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. இருப்பினும் அப்போது ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா நேரம் செல்ல செல்ல சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நிதானமாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

ஆர்ச்சருக்கு அடி:

குறிப்பாக இங்கிலாந்தின் முதன்மை பவுலரான ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 16வது ஓவரில் அட்டகாசமாக விளையாடிய அவர் 19 ரன்கள் விளாசி திருப்புமுனையை உண்டாக்கினார். தொடர்ந்து அசத்திய அவர் 72* ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் சிறந்த பவுலரை அடித்து நொறுக்கினால் மற்றவர்களும் தடுமாறுவார்கள் என்ற நோக்கத்துடன் ஆர்ச்சரை வெளுத்து வாங்கியதாக திலக் வர்மா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்களின் சிறந்த பவுலரை நான் டார்கெட் செய்ய விரும்பினேன். ஏனெனில் அவர்களுடைய சிறந்த பவுலரை நீங்கள் அட்டாக் செய்யும் போது மற்ற பவுலர்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனவே மறுபுறம் விக்கெட்டுகள் விழும் போது நான் எதிரணியின் சிறந்த பவுலரை எதிர்கொள்ள விரும்பினேன்”

- Advertisement -

திலக் வர்மா வழி:

“அதை நான் செய்வது எங்களுடைய மற்ற பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாட உதவும். அதனால் எனக்கு நானே ஆதரவு ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அவருக்கு எதிராக நான் வெளிப்படுத்திய ஷாட்டுகள் வலைப் பயிற்சியில் வேலை செய்ததாகும். அதற்கு நான் மனதளவில் தயாராக இருந்தேன். அவ்வாறு செய்தது எனக்கு நல்ல முடிவை கொடுத்துள்ளது. எது நடந்தாலும் நான் களத்தில் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்”

இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிராக தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ஜாஸ் பட்லர் – விவரம் இதோ

“கடந்த போட்டியின் போது நான் கௌதம் கம்பீரிடம் பேசினேன். ஓவருக்கு 6 – 7 முதல் 10 ரன்கள் தேவைப்படுவது வரை என்னால் அணிக்காக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட முடியும். அதற்கு நீங்கள் வளைவுத்தன்மையுடன் இருப்பது அவசியம். கௌதம் கம்பீரும் அதை தண்ணீர் இடைவெளியின் போது என்னிடம் சொன்னார். உங்களால் அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாட முடியும் என்பதை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். அது வேலை செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

Advertisement