IND vs WI : பயமறியாத காளையாக சூரியகுமாரின் சாதனை சமன் – ரோஹித்தின் 17 வருட ஆல் டைம் சாதனையும் உடைத்த திலக் வர்மா

Tilak Varma 5
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் பின்னடைவை சந்தித்த இளம் இந்திய அணி மனம் தளராமல் ஆகஸ்ட் 8ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 159/5 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ப்ரெண்டன் கிங் 42 (42) ரன்களும் கேப்டன் ரோவ்மன் போவல் அதிரடியாக 40* (19) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 160 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 34/2 என தடுமாறிய இந்தியாவுக்கு நான் இருக்கிறேன் என்ற வகையில் அடுத்ததாக களமிறங்கி அட்டகாசம் செய்த சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் முதல் முறையாக அதிரடியாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

அசத்தும் திலக் வர்மா:
அதே வேகத்தில் 14 ஓவர்கள் வரை அதிரடியாக விளையாடிய அவர் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (44) ரன்கள் குவித்து வெற்றி உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் தனது பங்கிற்கு சிறப்பாக பேட்டிங் செய்த திலக் வர்மா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (37) ரன்கள் எடுத்தார். கடைசியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 20 (15) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா சிறப்பான வெற்றி பெற்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

முன்னதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா ஐபிஎல் தொடரில் கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு இந்த வருடம் மீண்டும் அசத்தியதால் இத்தொடரில் இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் முதலிரண்டு போட்டிகளில் சவாலான பிட்ச்சில் இதர வீரர்கள் அனைவரும் தடுமாறிய போது அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் 39, 51 என 2 போட்டிகளிலும் அதிகபட்ச ஸ்கோர் அடித்து வெற்றிக்கு போராடியதை அனைவரும் பாராட்டினர்.

- Advertisement -

அந்த வரிசையில் இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு 49* ரன்கள் அடித்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 3 போட்டிகளிலும் 30க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சூரியகுமார் யாதவின் சாதனையை சமன் செய்துள்ளார். சொல்லப்போனால் தங்களுடைய முதல் 3 சர்வதேச டி20 போட்டிகளில் முடிவில் சூரியகுமார் யாதவ் எடுத்த 139 ரன்களை மிகச் சரியாக திலக் வர்மாவும் (39, 51, 49) எடுத்துள்ளது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்துகிறது என்றே சொல்லலாம்.

இத்தனைக்கும் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த வயதிலேயே இவ்வளவு சிறப்பாக செயல்படுவது மற்றுமொரு வியப்பாகும். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 அல்லது அதற்கு குறைவான வயதில் அதிகபட்ச ஸ்கோர் (51) அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் அவர் கடந்த போட்டியிலேயே உடைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007 டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா தன்னுடைய 20 வயதில் 50* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:IND vs WI : நாங்க பண்ண இந்த சின்ன தப்பு தான் எங்களது தோல்விக்கு காரணமாக மாறிடுச்சு – ராவ்மன் பவல் வருத்தம்

மொத்தத்தில் இளம் வயதிலேயே பயமறியாத காளையாக செயல்படும் திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதுக்குள் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் 3 இடங்களில் இருப்பது அவருடைய திறமைக்கு மற்றொரு சான்றாக இருந்து வருகிறது. அந்த பட்டியல்:
1. திலக் வர்மா : 51
2. ரோஹித் சர்மா : 50*
3. திலக் வர்மா : 39
4. திலக் வர்மா : 40*
5. ரிஷப் பண்ட் : 38

Advertisement