இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான இவர்களும் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள் – லிஸ்ட் இதோ

Ganguly

தற்போது நாம் பேட்ஸ்மேன்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் பலர் ஒருகாலத்தில் ஆல்-ரவுண்டராக இருந்துள்ளார்கள். பேட்டிங் மட்டுமின்றி ஒருசில போட்டிகளில் தங்களது சிறப்பான பாந்துவீச்சின் மூலம் வெற்றியையும் தேடித்தந்துள்ளார்கள். அப்படி இந்திய அணிக்காக பந்துவீசி ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

sachin

சச்சின் டெண்டுல்கர் :

24 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடியவர். பேட்டிங் மட்டுமே இவர் பிடிக்கவில்லை. இவரால் அற்புதமாக லெக் ஸ்பின் வீச முடியும். மொத்தம் இரண்டு முறை இவர் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

Ganguly 1

சௌரவ் கங்குலி :

- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தில் இவர் மிதவேகப்பந்து பேசினார். 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார் சௌரவ் கங்குலி.

Sehwag

விரேந்தர் சேவாக் :

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன இவர் வலதுகை ஆப் ஸ்பின்னர் வீசுவார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெல்லியில் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது 104 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.