- Advertisement -
உலக கிரிக்கெட்

WI vs PAK : நன்றாக தூங்கியதுதான் எனது சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் – தாமஸ் பேட்டி

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் தாமஸ் கூறியதாவது : இந்த போட்டி ஒரு இளம் வீரராக எனக்கு சிறப்பான துவக்கம் என்று நினைக்கிறன். இந்த ஆட்டநாயகன் விருதினை விவியன் ரிச்சர்ட்ஸ்யிடம் இருந்து பெறுவதை பெருமையாக நினைக்கிறன். நேற்று இரவு நன்றாக தூங்கினேன். உலகக்கோப்பை முதல் போட்டி என்ற எந்த பதட்டமும் இல்லாமல் நல்ல சிந்தனையுடன் உறங்கி எழுந்தேன்.

போட்டியில் பதட்டமின்றி பந்துவீசினேன். அதனால், என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது. மேலும், ரசல் பந்துவீச்சினை சிறப்பாக ஆரம்பித்தார் என்றும் தாமஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by