- Advertisement -
ஐ.பி.எல்

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் மோசமான தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – ஒப்புக்கொண்ட கே.எல் ராகுல்

கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் கொல்கத்தா அணியிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி பெரிய தோல்வியை சந்தித்து இந்த தொடரில் ஐந்தாவது தோல்வியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கும் பின்தங்கியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது.

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக சுனில் நரேன் 81 ரன்களையும், பிலிப் சால்ட் 32 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது கொல்கத்தா அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்ததது.

இதன்காரணமாக கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : நாங்கள் பெரிய இலக்கை நோக்கி சேசிங் செய்ய வேண்டிய நிலைமை இந்த போட்டியில் ஏற்பட்டது. இது போன்ற போட்டிகளில் விரைவாக ரன்களை குவிக்க முயற்சிக்கும் போது விக்கெட்டுகள் எளிதாக விழுந்து விடுகின்றன.

- Advertisement -

ஒட்டுமொத்தமாகவே எங்கள் அணியின் மோசமான செயல்பாடு இது. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலுமே நாங்கள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தோம். கொல்கத்தா அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி எங்களை அழுத்தத்திற்குள் தள்ளினர். எங்களுடைய அணியில் உள்ள இளம் பந்துவீச்சாளர்கள் அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் தொடர்ச்சியாக ரன்களை வழங்கினர். ஒரு நல்ல அணிக்கு எதிராக விளையாடும் போது இது போன்ற ஆட்டம் இருக்கத்தான் செய்யும்.

இதையும் படிங்க : லக்னோ அணியை அவர்களது இடத்திலேயே வச்சி செய்ஞ்சு நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

நாங்கள் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டோம். 200 ரன்கள் வரை கொடுத்திருந்தால் சேசிங் செய்ய ஏதுவாக இருந்திருக்கும். இருப்பினும் எங்களது பேட்ஸ்மேன்களிடம் இனி வரும் போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்த அறிவுரனை வழங்கி வருகிறோம். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -