கெளதம் கம்பீர் மாதிரி கேரக்டர் தான் சரி.. இல்லனா அவங்கள அடக்க முடியாது.. திசாரா பெரேரா பேட்டி

Thisara Perera
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அனுபவத்தை கொண்ட கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

அதே போல ஐபிஎல் தொடரிலும் 2 கோப்பைகளை கேப்டனாக வென்ற அவர் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அது போக களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய கம்பீர் எதிரணியுடன் சண்டை போடுவதற்கு தயங்காதவர். சொல்லப்போனால் விராட் கோலியிடம் ஐபிஎல் தொடரில் 2 முறை சண்டை போட்ட அவர் இந்த வருடம் தாமாக சென்று பேசி பிரச்சினையை முடித்து வைத்தார்.

- Advertisement -

அடங்க மாட்டாங்க:
அந்த வகையில் மிகப்பெரிய அனுபவத்தையும் அதிரடியையும் கோபத்தையும் கொண்டுள்ள அவர் பயிற்சியாளராக எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கௌதம் கம்பீர் களத்தில் மிகவும் அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்படக் கூடியவர் என முன்னாள் இலங்கை வீரர் திசாரா பெரேரா கூறியுள்ளார்.

சொல்லப்போனால் ஒரு அணிக்கு கௌதம் கம்பீர் போன்றவர் தான் பயிற்சியாளராக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இல்லையெனில் வீரர்களை அடக்க முடியாமல் கட்டுப்படுத்த முடியாமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “2011 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஃபைனலில் அவருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன்”

- Advertisement -

“அப்போட்டியில் நான் தான் அவரை அவுட்டாக்கினேன். அந்த தருணம் மறக்க முடியாது. இந்த ஐபிஎல் தொடரில் கூட கம்பீர் நன்றாகவே செயல்பட்டார். சில நேரங்களில் அவர் மிகவும் அதிரடியாகவும் முரட்டுத்தனமாகவும் இருப்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆனால் பயிற்சியாளராக இருப்பவருக்கு அது நல்லது என்று நான் கருதுகிறேன். ஒரு பயிற்சியாளருக்கு ஆக்ரோஷமும் அவசியம்”

இதையும் படிங்க: இந்திய அணியில் போட்டியே அபிஷேக் சர்மாவுக்கும் வாஷிங்டன் சுந்தருக்கும் தான்.. ஹைதெராபாத் கோச் பேட்டி

“இல்லையென்றால் உங்களால் உங்களது வீரர்களை கட்டுப்படுத்த முடியாது. எனவே அவரைப் பயிற்சியாளராக இந்தியா நியமித்துள்ளது மிகவும் நல்ல முடிவு என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். அதே நிகழ்ச்சியில் ஏஞ்சேலோ மேத்தியூஸ் பேசியது பின்வருமாறு. “கம்பீர் எப்போதும் கடும் போட்டியை கொடுக்கக்கூடிய முரட்டுத்தனமானவர். பேட்டிங்கில் கூட அவர் எதையும் விட்டு தர மாட்டார். அவரது விக்கெட்டை எடுக்க நீங்கள் போராட வேண்டும். சிறந்த கேரக்டராக அறியப்படும் அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Advertisement