இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களில் ஒருவரும் திறமையான பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் சமீபகாலங்களாக அணியில் இடம்பெறவில்லை.கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக விளையாடி வந்த அவர் தற்போது அவுட் ஆப் பார்மில் இருப்பதால் அணியில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் நாயர் தான் என்றும் சொல்லப்படுகின்றது.
2016ம் ஆண்டின் ஐபிஎல்-ன் போது தினேஷ் கார்த்திக் மும்பையில் நாயர் வீட்டில் தான் தங்கியுள்ளார். நாயர் வீட்டில் குளியலறையில் ஷவர்கள் சரியாக வேலைசெய்யவில்லையாம். அங்கிருந்த பக்கெட்டும் உடைந்திருந்ததாம். ஆனாலும் தினேஷ் கார்த்திக் அனைத்தையும் சரிசெய்து பொறுப்பாக நடந்துகொண்டாராம்.
நாயர் அந்த வீட்டின் அறை தினேஷ் கார்த்திக்கை எரிச்சடலைய வைக்கும் வகையிலேயே இருந்ததாம்.சென்னையில் பங்களாவில் வசித்த அவருக்கு மும்பையில் சாதாரண வீட்டில் இருப்பது கடினமாக இருந்ததாம். ஒரு நாள் இரவு மட்டும் ஓட்டலுக்கு செல்லலாம் என்று கெஞ்சிய போதும் நாயர் நோ சொல்லிவிட்டாராம்.
அந்த நாட்கள் தான் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானதாம். அப்போது நடைபெற்றுவந்த ரஞ்சி கோப்பையிலும் ஒழுங்காக செயல்படாததால் தினேஷ் கார்த்திகை ஒருகாலத்தில் 9கோடிவரை ஏலம் எடுத்த ஐபிஎல்-இல் 2கோடியான அடிப்படை விலைக்கே ஏலம் போனாராம்.