தேவைப்படுப்போது அடிக்கமாட்டாங்க – ரோஹித், விராட், ராகுல் மீது முன்னாள் ஜாம்பவான் விமர்சனம்

Rahul-2
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் ஜூன் 9 – 19 வரை சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. அதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் இதே ஐபிஎல் தொடரில் அசத்திய மூத்த மற்றும் இளம் வீரர்கள் கொண்ட அணி விளையாடுகிறது.

Kohli

- Advertisement -

ரோஹித் – விராட் பார்ம்:
முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்திய பேட்டிங் துறையின் தூண்களாக கருதப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவருமே ரன்கள் அடிப்பதற்கு தடுமாறினர். அதில் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி 2019க்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கும் மேலாக 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறினார். அதை விட இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல்முறையாக 3 கோல்டன் டக் அவுட்டாகி கொஞ்சம் கூட பழைய பன்னீர்செல்வம் ஃபார்முக்கு திரும்பவில்லை என்று காட்டினார்.

சரி முன்னாள் கேப்டன் தான் அப்படி என்று பார்த்தால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா இந்த ஐபிஎல் தொடரில் மும்பையின் கேப்டனாக பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்கள் அடிக்க தவறினார். சொல்லப்போனால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இவர்கள் தான் அப்படி என்றால் இந்திய பேட்டிங் துறையின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் கேஎல் ராகுல் இதே ஐபிஎல் தொடரில் 616 ரன்கள் குவித்தாலும் 130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக பேட்டிங் செய்தது அவர் கேப்டன்ஷிப் செய்த லக்னோவுக்கு தோல்வியை பரிசளித்தது.

kapildev

கபில் தேவ் விமர்சனம்:
மொத்தத்தில் இந்திய டாப் ஆர்டரில் இடம் வகிக்கும் இந்த மூவருமே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் மட்டுமல்லாது சமீப காலங்களாக இப்படி தடுமாறிக் கொண்டிருப்பது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பெயரை வாங்கியுள்ள இந்த 3 வீரர்களும் தேவைப்படும் போது இந்தியாவுக்காக ரன்கள் அடிப்பதில்லை என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்களுக்கு மிகப்பெரிய பெயர் உள்ளது என்பதால் அவர்கள் மீது பெரிய அழுத்தமும் உள்ளது. இருப்பினும் அது ஒரு விஷயமல்ல. நீங்கள் பயமற்ற கிரிக்கெட் விளையாட வேண்டும். இந்த வீரர்களால் 150 – 160 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அடிக்க முடியும். ஆனால் உங்களுக்கு ரன்கள் தேவைப்படும் போது அவர்கள் அவுட்டாகி விடுவார்கள். அதேபோல் அடிக்க வேண்டுமென்ற சமயத்திலும் அவுட்டாகி விடுகின்றனர். நீங்கள் நங்கூரமாக நின்றாலும் அதிரடியாக விளையாடினாலும் அதுபோன்ற ஆட்டம் மற்றவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது” என்று கூறினார்.

Rahul

அதாவது இந்தியாவுக்காக உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் ரன்கள் அடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இவர்கள் அவுட்டாகி விடுவதாக கபில்தேவ் வேதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களால் 150 – 160 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடியும் என்றாலும் அவர்கள் அதை முயற்சிப்பதில்லை என்று கூறியுள்ளார். அவர் சொல்வதும் 100க்கு 100 உண்மையாகும். ஏனெனில் முக்கியமான போட்டிகளில் எடுத்துக்காட்டாக 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் அடிக்க வேண்டுமென்ற தருணத்தில் இந்த 3 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி தோல்வியை கொடுத்தனர்.

- Advertisement -

அதேபோல் 2021 டி20 உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியை தவிர எஞ்சிய 2 பேர் சொதப்பினர். மேலும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரும் அடிக்கவில்லை. ஆனால் பெரிய போட்டிகளில் இந்தியா வெற்றி பெற இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் இவர்கள் சுமாராக செயல்படுவதாலேயே சமீப காலங்களில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

rahul 4

பெயர் மட்டும் போதாது:
“கேஎல் ராகுல் பற்றி நீங்கள் பேசும்போது, நீங்கள் 20 ஓவர்களில் விளையாட வேண்டுமென்று அணி நிர்வாகம் கூறினால் அதற்காக கடைசி வரை அவுட்டாகாமல் 60 ரன்கள் அடித்து விட்டு வந்தால் அதில் எந்த பயனும் இல்லை. அதுபோன்ற அணுகுமுறையை மாற்ற வேண்டும். பெரிய வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். பெரிய பெயர் இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் பெரிய செயல்பாடுகளையும் காண்பிக்க வேண்டும்” என்று இது பற்றி கபில்தேவ் மேலும் பேசினார்.

இதையும் படிங்க : INDvsRSA : முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி – லிஸ்ட் இதோ

அதாவது பெரிய பெயர் இருந்தால் மட்டும் போதாது என்று விமர்சித்துள்ள கபில்தேவ் முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்காக பெயருக்கு ஏற்றார் போல் பெரிய அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement