- Advertisement -
ஐ.பி.எல்

ஓரே ஓவர் தான். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த அடுத்த பிரட் லீ – யார் இவர் ?

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி இறுதி ஓவர் வரை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான என்டர்டைமெண்ட் கொடுத்தது என்றே கூறலாம். ஏனெனில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவித்து அசத்த பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியின் ஒரு கட்டத்தில் 120 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்தது. அதன் பின்னர் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இருந்து வெளியேற பூரான் மற்றும் மார்க்ரம் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர்.

18-ஆவது ஓவர் வரை 2 விக்கெட் மட்டுமே விழுந்த நிலையில் இறுதி இரண்டு ஓவரில் வெற்றி பெற 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 19வது ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மான் நான்கு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க இறுதி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதுதான் இந்த போட்டியில் மிகப்பெரிய மேஜிக் நடந்தது. அந்த முக்கியமான 20-வது ஓவரை ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான கார்த்திக் தியாகி வீசினார்.

- Advertisement -

அந்த ஓவரின் முதல் பந்து டாட் பாலாக அமைய, இரண்டாவது பந்தில் மார்க்ரம் சிங்கிள் அடித்து மறுமுனைக்கு சென்றார். 3-வது பந்தில் பூரானும், 5வது பந்தில் ஹூடாவும் ஆட்டமிழக்க கடைசி பந்தை டாட் பாலாக வீசி யாரும் எதிர்பாராத வகையில் ராஜஸ்தான் அணிக்கு சாத்தியமே இல்லாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார் கார்த்திக் தியாகி. கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை ராஜஸ்தான் அணிக்கு பெற்று கொடுத்தார் இந்த இளம் பிரெட் லீ.

இந்நிலையில் ஒரே ஓவரில் கிரிக்கெட் உலகின் ஹீரோவாக மாறிய இவர் யார் ? என்பது குறித்த தொகுப்பே இது. பிரட் லீ போன்று அதே ரன்னப்புடன் பந்துவீசும் 20 வயதான கார்த்திக் தியாகி ஏற்கனவே அண்டர் 19 இந்திய அணியில் விளையாடியவர். கடந்த 2017 ஆம் ஆண்டு உத்திரபிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இவர் தனது சிறப்பான பந்துவீச்சில் மூலம் அடுத்த 2018 ஆம் ஆண்டே விஜய் ஹசாரே தொடருக்கான அணியிலும் இடம் பிடித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன்பிறகு அண்டர் 19 தொடரில் இந்திய அணிக்காக கலக்கிய இவரை கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐ.பி.எல் தொடரிலேயே இவரது பந்துவீச்சு பெருமளவு பேசப்பட்டது. இவர் இதுவரை 12 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி அணி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 20 வயதான இவர் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை ஸ்விங் செய்யும் திறமையும் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

- Advertisement -
Published by