தோனிக்கு முதல் முறை ஸ்பான்சர் செய்ய என்னவெல்லாம் யோசித்தேன் தெரியமா ? – தோனியின் முதல் ஸ்பான்சர் பேட்டி

Sponcer

தோனி இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி. என்ன இருந்தாலும் அதனை விட பல கோடி மக்களின் நினைவில் இருக்கிறார் தோனி. தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். தான் முதன் முதலாக ஆடிய ஆட்டத்தில் மற்ற வீரர்கள் அனைவரும் சொகுசாக பஸ்பான்சர் செய்யப்பட்ட பேட், கையுறை போன்றவற்றை அணிந்து இருப்பார்கள்.

Dhoni 3

ஆனால், தோனி ஒரு பழைய பேட் மற்றும் கால் மட்டை ஆகியவற்றை அணிந்து விளையாட வந்திருப்பார். மிகவும் ஏழ்மையில் வாழ்ந்தவர். தோனி நன்றாக திறமை இருந்தும் அவருக்கு அங்கீகாரம் ஆரம்ப கட்டத்தில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தோனிக்கு முதன்முதலாக ஸ்பான்சர் கிட் கொடுக்க ஆறுமாதம் யோசித்ததாக முதல் ஸ்பான்சர் அளித்த சோமி கோலி பேசியுள்ளார். இதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் :

Dhoni Bat issue

நாங்கள் கிரிக்கெட் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து இருக்கிறோம். இதன் காரணமாக புதிய திறமைகளை எப்போதும் கண்டுபிடிக்க வேண்டிய வேலை எங்களுக்கு இருக்கும். அப்போதுதான் ராஞ்சியைச் சேர்ந்த விளையாட்டு பொருள் விற்பனை டீலர் பரம்ஜீத் சிங்(தோனியின் நண்பர்) தோனியைப் பற்றி என்னிடம் 1997 ஆம் ஆண்டு கூறினார்.

- Advertisement -

தொடர்ந்து தோனிக்கு இலவசமாக கிரிகெட் கிட் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து இது குறித்து எங்களிடம் கேட்டுக் கொண்டே வந்தார். நான் இது குறித்து தொடர்ந்து ஆறு மாதம் யோசித்துக்கொண்டிருந்தேன். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் தோனிக்கு இதனை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

dhoni

அப்போது எனக்கு தெரியாது இந்த சிறுவன் இப்படி ஒரு மிகப்பெரிய சாதனையை படைப்பான் என்று. 22 ஆண்டுகாலம் எங்களது தொடர்பு நீண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அவர். மேலும் சச்சினுக்கு தான் வழங்கிய பேட் மூலம் தான் முதல் இரட்டை சதத்தை அடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.