சூப்பராக வீசிய ஷமிக்கு பதிலாக சுமாராக வீசிய பும்ராவுக்கு சூப்பர் ஓவரை வீச கொடுத்தது இதனால் தானாம் – ரோஹித் பேட்டி

Bumrah-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் 179 ரன்களை அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைக்க இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் தனது முதல் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Shami 1

- Advertisement -

இந்த போட்டியில் பும்ரா நான்கு ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கினார். நேற்று பும்ராவின் பௌலிங் சொதப்பலாக இருந்தது. இருப்பினும் போட்டியான டை ஆன பிறகு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் தீவிர ஆலோசனைக்குப் பிறகு சூப்பர் ஓவரை பும்ராவிடம் கொடுத்தனர்.

அந்த ஓவரிலும் பும்ரா சுமாராகவே பந்துவீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இந்த போட்டியில் முகமது சமியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. அவர் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை டை ஆக்கினார். சாத்தியமே இல்லாத போட்டியை டை ஆக்கியதால் அவரே சூப்பர் ஓவரை விசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த சூப்பர் பும்ராவிற்கு கொடுக்கப்பட்டது.

bumrah 2

இந்நிலையில் இந்த பவுலிங் மாற்றம் குறித்து பேசிய இந்தியனின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : சூப்பர் ஓவருக்கு தனியாக ஏதும் திட்டம் தீட்ட முடியாது. என்ன நடக்கிறது என்பதை கவனமாக கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். அதன்படி இந்திய அணியில் யார் சிறந்தவ பவுலர் என்று யோசித்து பும்ராவின் கையில் கொடுத்தோம். இந்திய அணியின் முக்கியமான பவுலர் என்பதாலும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுபவர் என்பதாலும் இறுதியில் பும்ராவை தேர்வு செய்தோம் என்று ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement