சாம் கரனுக்கு பதிலாக சி.எஸ்.கே அணியில் இணையப்போகும் மாற்று வீரர் இவர்தான் – தகவல் இதோ

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய சென்னை அணியானது இம்முறை பலமாக திரும்பி வந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியானது முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் அடியெடுத்து வைத்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் தற்போது முதுகுவலி காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

curran 1

- Advertisement -

அவர் வெளியேறியது கிட்டத்தட்ட சிஎஸ்கே அணிக்கு ஒரு இழப்பு என்றே கூறலாம். ஏனெனில் பந்து வீச்சாளரான அவர் பேட்டிங்கிலும் கை கொடுக்க கூடியவர் என்பதை நாம் ஐபிஎல் தொடரில் கண்டுள்ளோம். இந்நிலையில் சாம் கரன் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளில் யார் மாற்று வீரராக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

அந்த வகையில் ஏற்கனவே சென்னை நிர்வாகம் பி.சி.சி.ஐ-யிடம் அளித்த கோரிக்கையின் படி தற்போது பிசிசிஐ சிஎஸ்கே அணியில் மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இன்னும் தொடர் முடிவடைய சில நாட்களே உள்ளதால் கூடிய விரைவில் சிஎஸ்கே அணி சாம் கரனுக்கான மாற்று வீரரை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

curran 1

அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணியின் பார்வையில் உள்ள நான்கு வீரர்கள் யாரெனில் ஏற்கனவே துபாயில் நெட் பவுலராக இருந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பிடல் எட்வர்ட்ஸ், டோமினிக் ட்ரேக்ஸ், ரவி ராம்பால் மற்றும் செல்டன் காட்ரெல் இவர்கள் நால்வரில் ஒருவர் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

curran

இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக மதியம் சிஎஸ்கே அணி மோத இருப்பதால் மாற்றுவீரர் விரைவில் அறிவிக்கப்படுவார். சாம் கரன் குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் : சாம் கரனுக்கு ஏற்பட்ட காயம் எதிர்பாராத வகையில் நடந்தது. அவர் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிப்பார் என காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement