காயமடைந்த ரோஹித் சர்மாவிற்கு பதிலாக களமிறங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rohith-2
Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா 2-வது இன்னிங்சில் 127 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் காரணமாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பிற்கு சென்றது. இந்நிலையில் அந்த இரண்டாவது இன்னிங்ஸ் முடிந்து ஐந்தாவது நாள் ரோகித் சர்மா பீல்டிங் செய்ய வரவில்லை. அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடைசி நாளில் பீல்டிங் செய்யவில்லை என்றும் இந்திய நிர்வாகம் அறிவித்திருந்தது.

rohith 1

இந்நிலையில் ஒருவேளை அவருக்கு காயம் குணமடையாமல் அடுத்த போட்டியில் விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக எந்த வீரர் விளையாடுவார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோகித் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் நிச்சயம் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்றாலும் அவரை களமிறக்கி காயத்தின் தன்மையைப் பெரிதாக்க வேண்டாம் என்று இந்திய நிர்வாகம் நினைத்தால் அவருக்கு பதிலாக மூன்று வீரர்கள் களமிறங்க தயாராக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

மாயங்க் அகர்வால் : ஏற்கனவே இந்த தொடரில் துவக்க வீரராக விளையாட இருந்த அகர்வால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டார். அவருக்கு பதிலாக விளையாடி வரும் ராகுல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 4 போட்டிகளிலும் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியிலேயே அமர்ந்துள்ளார்.

Agarwal-2

எனவே ரோகித்துக்கு பதில் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ப்ரித்வி ஷா : ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா கடைசியாக ஆஸ்திரேலிய தொடரின் போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது மீண்டும் ஐபிஎல் தொடர், நடைபெற்று முடிந்த இலங்கை தொடர் என தனது பார்மை நிரூபித்துள்ள அவர் இரண்டாவது தேர்வாக இருக்கிறார்.

அபிமன்யு ஈஸ்வரன் : ஏற்கனவே கடந்த பல தொடர்களாக இந்திய அணியில் இடம்பெற்று வந்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் அமர்ந்து வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிமன்யு ஈஸ்வரன் இந்த துவக்க வீரருக்கான போட்டியில் 3-வது வீரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement