இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவித்தாலும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 36 ரன்களுக்கு சுருண்டு மோசமான சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று ரசிகர்கள் நினைத்த இந்த போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கேப்டன் கோலியும் தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்ப உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக மோதும் 2வது போட்டியில் இந்திய அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்று கேள்வி அதிக அளவு எழுந்துள்ளது. மேலும் இரண்டாவது போட்டிக்கு முன்னர் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது இந்திய அணிக்கு ஏற்படவுள்ள முக்கியமாக பார்க்கப்படுவது யாதெனில் முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து முகமது ஷமியின் வலது கையில் பட்டு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தொடையிலிருந்து தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் யார் இணைவார்கள் ? என்ற கேள்வி பரவலாக பார்க்கப்படுகிறது.
இந்த கேள்விக்கு விடையாக நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவர்கள் இருவரே டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக சிராஜ் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனால் அதே வேளையில் சைனி டி20 போட்டியிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரி சற்று சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார்.
இதனால் சிராஜ் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாக அதிகமான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரையும் தாண்டி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்பினால் பேக்அப் வீரர்களாக இருக்கும் ஷர்துல் தாகூர் மற்றும் தமிழக வீரர் நடராஜன் அதுமட்டுமின்றி கார்த்திக் தியாகி ஆகிய மூவரில் ஒருவரை இந்திய அணிக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.