சொதப்பும் தவான். ஆனாலும் வாய்ப்பு தரும் நிர்வாகம். அவரை நீக்காததற்கு காரணம் – இதுதானாம்

Dhawan

இந்திய அணியின் துவக்க வீரர் ஆன தவான் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலாக ஆடிவந்த காரணமாக அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ப்ரித்வி ஷா இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 அணியில் துவக்க வீரராக விளையாடி வருகிறார். தற்போது டி20 போட்டியிலும் அவரது ஆட்டம் படு மோசமாகி வருகிறது.

dhawan

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் தவானின் மோசமாகவே ஆடினார். மேலும் அது மட்டுமின்றி உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி தொடரிலும் பெரிய அளவு ரன்களை அடிக்க முடியாமல் அவுட் ஆகி வருகிறார்.

இந்நிலையில் அடுத்து வர இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் அவர் தேர்வானார் இந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையிலும் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சொதப்பலாக விளையாடும் தவானுக்கு இவ்வாறு வாய்ப்பு வழங்க காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

Dhawan

அதன்படி தற்போது தவான் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதாலும் ஐசிசி தொடர்களில் பெரிய அளவு ரன் குவிக்கும் வீரராக இருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டும் அவரது அனுபவத்தையும் கருத்தில் கொண்டும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது எனவே ஆஸ்திரேலிய உலகக்கோப்பை தொடரிலும் அவரே துவக்கவீரராக களமிறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -