நியூசிலாந்து அணிக்கு எதிராக சஹாவை ஓரங்கட்டி பண்டை அணியில் எடுக்க இதுதான் காரணமாம் – கோலியின் ராஜதந்திரம்

Saha
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Ind-1

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரஹானே 46 ரன்கள் குவித்தார். துவக்கவீரர் அகர்வால் 34 ரன்களை குவித்தார் மற்றபடி யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. பந்துவீச்சாளர் ஷமி 21 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியில் அனுபவ வீரரான விருதிமான் சாஹாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை கோலி அணியில் தேர்வு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் அனுபவ வீரரான சஹாவிற்கு பதில் தொடர்ந்து சொதப்பும் பண்டை தேர்வு செய்வதா என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Pant

இதன் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்காம் அந்த காரணம் யாதெனில் இந்திய மைதானங்களில் பந்து அதிகமாக திரும்பும் என்பதால் விக்கெட் கீப்பிங் நுணுக்கங்கள் தெரிந்த சஹாவை பயன்படுத்தினார். நியூசிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பெரிய அளவில் ஸ்பின் எடுபடாது.

pant 2

மேலும் 4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டும் ஒரு ஸ்பின்னரை மட்டும் வைத்து விளையாடுவதால் விக்கெட் கீப்பிங் பெரிய அளவு பிரச்சனை இருக்காது என்று பண்டை கோலி தேர்வு செய்துள்ளார் என்று தெரிகிறது. மேலும் வெளிநாட்டு மைதானத்தில் சதம் அடித்து உள்ளதை கணக்கில் வைத்துள்ளதாக தெரிகிறது.

Advertisement