இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 135 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
திலக் வர்மாவிற்கு தொடர்நாயகன் விருது வழங்கியது ஏன்? :
ரோகித் சர்மாவிற்கு பதில் பிறகு கேப்டனாக வந்திருக்கும் சூரியகுமார் யாதவ் இப்படி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருவது மத்தியிலும் பாராட்டியினை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருது தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வேளையில் அவருக்கு பதிலாக திலக் வர்மாவிற்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது அனைவரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் வருண் சக்கரவர்த்தி முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்த தொடரில் 4 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததால் இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். இதன் காரணமாக அவருக்கே தொடர் நாயகன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக திலக் வர்மாவிற்கு இந்த தொடர் நாயகன் விருது வழங்கப்பட காரணம் யாதெனில் :
இந்த தொடரின் முதல் போட்டியில் 33 ரன்களையும், இரண்டாவது போட்டியிலும் 20 ரன்களை அடித்த அவர் கடைசி இரண்டு போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் 107 மற்றும் 120 ரன்களை சேர்த்தார். இப்படி ஒட்டுமொத்தமாக நான்கு போட்டிகளில் 280 ரன்கள் சேர்த்து இருந்த அவர் கடைசி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தாலும் அவரது சராசரி இந்த தொடரில் 140-ஆகவும் இருந்தன்.
இதையும் படிங்க : அடிச்சா செஞ்சுரி.. இல்லனா டக்.. தென்னாப்பிரிக்க தொடரில் மெகா சாதனையை நிகழ்த்தி – சஞ்சு சாம்சன் அசத்தல்
அதன் காரணமாகவே அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மற்றொருபுறம் இந்திய அணிக்காக மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு இந்த தொடர் நாயகன் விருது பறிபோனது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



