இந்திய ஜெர்சியில் உள்ள இந்த 3 நட்சத்திரங்களுக்கு பின் இருக்கும் ரகசியம் இதுதான் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய அணி பல ஆண்டுகாலம் கழித்து தங்களது ஜெர்ஸி உடையின் நிறத்தை மாற்றி இருக்கிறது. எப்போதும் ஒரே மாதிரியான நீலநிற உடையிலேயே தான் இந்திய அணி ஆடும். இந்த முறையும் நீல நிறத்தை தான் மாற்றி இருக்கிறது. ஆனால் இது அடர் நீல நிறமாக இருக்கிறது. 1980களில் இந்திய அணியால் அணியப்பட்ட அதே ஜெர்ஸி மீண்டும் கொண்டு வரப்பட்டு தற்போது இந்திய வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அணிந்து தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடி இருந்தனர்.

jersey 1

- Advertisement -

மேலும் நைக் நிறுவனம் இத்தனை ஆண்டுகாலம் இந்திய அணிக்கு ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனமாக இருந்தது. தற்போது MPL நிறுவனம் அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. இதன் காரணமாக அந்த மாற்றத்தை தெரிவிக்கும் வகையில் முற்றிலுமாக உடையின் நிறத்தை மாற்றி இருக்கிறது அந்த ஸ்பான்சர்ஷிப் நிறுவனம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் முதல் போட்டியின்போது இந்த உடை முதன்முதலில் அணிந்து விளையாடப்பட்டது.

மேலும் வழக்கமாக இடது மார்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் லோகோ இருக்கும். ஆனால் இந்த முறை அந்த லோகோவிற்கு மேலாக மூன்று நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த மூன்று நட்சத்திரங்களுக்கான உண்மையான காரணம் வெளிவந்திருக்கிறது. முதன்முதலாக இந்திய அணி 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பை தொடரை வென்றது.

ind jersey

அதன் பின்னர் 24 வருடம் கழித்து தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றியது. அதன்பிறகு நான்கு வருடங்கள் கழித்து 50 ஓவர் உலகக் கோப்பை தொடரையும் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த மூன்று உலகக் கோப்பையையும் வைத்துதான் மூன்று நட்சத்திரங்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் :

Kohli

“கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நாங்கள் சுமந்து இந்த உடையை அணிந்து இருக்கிறோம். இதன் காரணமாக எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. அணியின் வெற்றிக்கு ஏற்ப இந்திய அணியின் மரியாதை குறையாமல் விளையாட இந்த ஜெர்ஸி அணிந்து உறுதி எடுத்திருக்கிறோம். மேலும் அந்த மூன்று நட்சத்திரங்கள், இத்தனை வருடங்களாக இந்திய அணி எவ்வளவு சாதித்து இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த உடையை அணிந்து இருப்பது எங்களுக்கு பெருமை கொடுக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.

Advertisement