புதிய தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தல தோனி.? – வெளியான புதுத்தகவல்

Sunil
- Advertisement -

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வுக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . தேர்வுக் குழுவை தேர்வு செய்வதன் பணி இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் கையில் உள்ளது.

Joshi 1

- Advertisement -

இந்த குழுவின் தலைமை ஆலோசகராக மதன்லால் இருக்கிறார். புதிய தேர்வுக்குழுவிற்காக ஐந்து முன்னாள் வீரர்களான சிவராமகிருஷ்ணன் ,வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுகான் ,சுனில் ஜோஷி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடம் முக்கியமாக தோனியை எவ்வாறு கையாளப் போகிறார்கள்? தோனி ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் அவரை டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

இதற்கு எதார்த்தமாகவும் தெளிவாகவும் பதில் கொடுத்த சுனில் ஜோஷியை தேர்வு செய்துள்ளனர். மேலும் விராட் கோலி என்ற பெரும் ஆளுமையை எவ்வாறு கையாளப் போகிறார்கள்? எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.விராட் கோலி எளிதாக அணுக முடியாத நபர் . முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ளேவை அணியில் இருந்து வெளியேற்ற அவர் செய்த காரியங்கள் என்னென்ன, என அனைவருக்கும் தெரியும்.

Joshi

இவ்வாறு ஒரு அழுத்தமான நபரை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்றும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தெளிவான பதிலை கொடுத்த சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவரான எல் சிவராமகிருஷ்ணன் தேர்வுக்குழு தலைவராக இருப்பதே விருப்பம் என விலகிவிட்டார் இதன் காரணமாக அவர் தேர்வு குழு உறுப்பினராக நியமிக்கப்படவில்லை.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கான அணியில் தோனி இடம்பிடிப்பாரா மாட்டாரா என்பதுதான் பெரும் கிரிக்கெட் உலகில் பெரும் கேள்வியாக இருந்துவரும் நிலையில், அந்த கேள்வியைத்தான் தேர்வாளர்களுக்கான நேர்காணலில் கலந்துகொண்ட போட்டியாளர்களிடம் சிஏசி கேட்டுள்ளது. இந்த தகவலை பி.சி.சி.ஐ அதிகாரி ஒரு தெரிவித்துள்ளார்.

Dhoni-kohli

இதனால் தோனியின் இடத்தை அவர் எவ்வாறு நிரப்ப போகிறார் என்பது தற்போது பெரிய கேள்வியாகவும், பெரிய எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது துவங்க உள்ள தென்னாபிரிக்க தொடருக்கான வீரர்களை இவர் தலைமையிலான குழுவே தேர்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement