ப்ரித்வி ஷா மற்றும் படிக்கலை இங்கிலாந்து செல்ல மறுத்த பி.சி.சி.ஐ – காரணம் இதுதான்

Shaw

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளது. ஏற்கனவே இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் வீரராக தற்போது பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துவக்க வீரர கில் நாடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அணியில் ராகுல், அகர்வால், ஈஸ்வரன் ஆகியோர் இருப்பதால் துவக்க வீரருக்கான இடத்தில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனாலும் கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் சுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகிய இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்புமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்த பிசிசிஐ எந்தவித அதிகாரப்பூர்வ பதிலையும் திரும்ப அனுப்பாமல் இருந்தது.

Shastri

இந்நிலையில் தற்போது ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகியோர் இங்கிலாந்து செல்ல மாட்டார்கள் என்று பி.சி.சி.ஐ கூறி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து பேசி உள்ள பிசிசி அதிகாரி ஒருவர் கூறுகையில் : தற்போது இங்கிலாந்துக்கு எந்த ஒரு வீரரையும் அனுப்ப நாங்கள் திட்டமிடவில்லை. ஏனெனில் ஜூலை 13-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை இலங்கையில் இந்திய அணிக்கு இரண்டு தொடர்கள் இருக்கிறது.

- Advertisement -

IND

அதை முடித்துக் கொண்டு இந்திய அணி திரும்பும்வரை பிரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகியோர் இந்திய அணியுடன் தான் இருப்பார்கள். அதன்பிறகு வேண்டுமென்றால் இலங்கையிலிருந்து அவர்கள் இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்பலாமே தவிர அதுவரை அவர்கள் இலங்கையில் தான் இருப்பார்கள் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement